சிங்கப்பூரின் பொருளியல் இவ் வாண்டின் முதலாம் காலாண்டில் 4.4 விழுக்காடு வளர்ச்சி கண்டுள் ளது என்றும் 2018 முழுமைக்குமான பொருளியல் வளர்ச்சி 2.5 விழுக் காட்டுக்கும் 3.5 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுவதாக வர்த்தக தொழில் அமைச்சு தெரிவித்துள் ளது. இவ்வாண்டு முழுமைக்கும் நாட்டின் பொருளியல் வளர்ச்சி 1.5 விழுக்காட்டுக்கும் 3.5 விழுக் காட்டுக்கும் இடைப்பட்டிருக்கும் என்று வர்த்தக தொழில் அமைச்சு முன்னதாக முன்னுரைத்திருந்தது. இவ்வாண்டு முதலாம் காலாண்டு வளர்ச்சியான 4.4% முன்னைய முன்னுரைப்பான 4.3 விழுக்காட்டைக் காட்டிலும் சற்று மேம்பட்டிருந்தது. ஒப்புநோக்க, அதற்கு முந்திய காலாண்டு வளர்ச்சியான 3.6 விழுக்காட்டை விட இது உயர்வானதே.
பொருளியல் வளர்ச்சிக்கு முக் கிய காரணம் உற்பத்தித்துறையின் வளர்ச்சியே. அது முன்னைய காலாண்டு வளர்ச்சியான 4.8 விழுக்காட்டைத் தாண்டி, இவ் வாண்டு முதலாம் காலாண்டில் 9.8 விழுக்காடானது.

