சிண்டா தலைமைத்துவத்தில் மாற்றம்

சிண்டா தலைமைத்துவத்தில் மாற்றம்

1 mins read
205dbc5f-5725-47ce-8878-25fd514552a1
-

இர்ஷாத் முஹம்மது

சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) புதிய இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு அன்பரசு ராஜேந்திரன், 45, பொறுப்பேற்க உள்ளார். ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் அவர் அப்பொறுப்பை ஏற் பார். சிண்டாவின் இப்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான திரு குமரன் பரதன், 61, அதே நாளில் சிங்கப்பூர் இந்தியர் வர்த் தக சபையின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவியேற்கவுள் ளார். இந்தத் தலைமைத்துவ மாற் றங்களை நேற்று சிண்டா அறி வித்தது.

கடந்த நான்கு ஆண்டுகளாக திரு பரதன், சிண்டா தலைமை நிர்வாக அதிகாரியாக சிறப்பாகப் பணியாற்றியதற்காக சிண்டா அறங்காவல் குழுவின் சார்பில் அதன் தலைவரான துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் நன்றி தெரிவித்தார். "தலைமை நிர்வாக அதிகாரி யாக திரு பரதன் திறம்படப் பணி யாற்றினார். சமூக சேவைக்கு அடையாளமாக விளங்கும் சிண்டாவின் நற்பண்பை அவர் பிரதிபலித்தார்," என்று திரு தர்மன் புகழாரம் சூட்டினார். சிண்டாவின் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சரு மான குமாரி இந்திராணி ராஜா வும் திரு பரதனுக்கு தமது நன்றியைத் தெரிவித்தார்.

சிண்டாவின் இப்போதைய தலைமை நிர்வாக அதிகாரியான திரு குமரன் பரதனுடன் (இடது) அதன் புதிய இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்க இருக்கும் திரு அன்பரசு ராஜேந்திரன். படம்: சிண்டா