தோ பாயோ விபத்தில் சைக்கிளோட்டி படுகாயம்

தோ பாயோ விபத்தில் சைக்கிளோட்டி படுகாயம்

1 mins read
d40fdb78-4685-49fc-8027-4e45f5920522
-

தோ பாயோவில் நிகழ்ந்த விபத்தில் சைக்கிள் ஓட்டி ஒருவர் படுகாயம் அடைந்தார். புதன்கிழமை காலை தோ பாயோ வீவக குடியிருப்புப் பேட் டையில் விபத்து நிகழ்ந்தது. குப்பை சேகரிக்கும் வாகனம் மோதியதில் 49 வயது சைக் கிளோட்டி காயம் அடைந்தார். லோரோங் 1 புளோக் 155ல் நிகழ்ந்த விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர், காயம் அடைந்தவரை டான் டோக் செங் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சைக்கிளோட்டி சுய நினைவுடன் இருந்ததாகக் காவல் துறையினர் கூறினர். குப்பை சேகரிக்கும் வாகனம் திரும்பியபோது எதிரே இடது புறமாக வந்த சைக்கிளோட்டி மீது மோதியது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோ பாயோ லோரோங் 1ல் நிகழ்ந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் சாட்சியம் அளிக்க முன்வருமாறு சைக்கிள் ஓட்டியின் மகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். படம்: ஃபேஸ்புக் நூர் ராவ்டா