சிங்கப்பூர் வந்துசேர்ந்த புதிய ரயில் பெட்டிகள்

சிங்கப்பூர் வந்துசேர்ந்த புதிய ரயில் பெட்டிகள்

1 mins read
b7ddf9ed-1eb0-4de5-bbde-b2835b354d64
-

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதைக்கான புதிய ரயில் பெட்டிகள் நேற்று சிங்கப்பூர் வந்து சேர்ந்தன. மொத்தம் 91 பெட்டிகளில் முதல் தொகுதி ரயில் பெட்டிகள் சிங்கப்பூர் வந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் நேற்று வெளியிட்ட தகவலில் தெரிவித்தது. சிங்கப்பூரிலேயே முதல் முறையாக முழுமையான தானியக்க வசதிகளைப் பெற்றுள்ள இந்த ரயில் பெட்டிகளில் ஒவ்வொரு பக்கத்திலும் ஐந்து கதவுகள் இடம்பெற்றுள்ளன.

இதனால் பயணிகள் எளிதாக ரயிலில் ஏறி இறங்கலாம். புதிய ரயில் பெட்டிகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு முன்பு சோதிக்கப்படும். 2019ஆம் ஆண்டின் இறுதியில் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையின் முதல் கட்டம் போக்குவரத்துக்குத் திறக்கப்படுகிறது. அதில் புதிய ரயில் பெட்டிகள் பயன்படுத்தப்படும். எஞ்சிய ரயில் பெட்டிகள் கட்டம் கட்டமாக 2022ஆம் ஆண்டுக்குள் வந்துசேரும். படம்: நிலப் போக்குவரத்து ஆணையம்