வரிசெலுத்தாத சிகரெட்டுகள்: 32 ஊழியர்களுக்கு அபராதம்

வரிசெலுத்தாத சிகரெட்டுகள்: 32 ஊழியர்களுக்கு அபராதம்

1 mins read
608d37d6-2ea4-4137-9b3a-8e7c1565ca5f
-

வரி செலுத்தப்படாத சிகரெட்டு களை வைத்திருந்த குற்றத்திற்காக 32 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பொங்கோலில் அமைந்துள்ள வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி ஒன்றில் சிங்கப்பூர் போலிஸ் படை, சுங்கத் துறை அதிகாரிகள் இம்மாதம் 22ஆம் தேதி மேற்கொண்ட திடீர் சோத னையில் அவர்கள் பிடிபட்டனர். ஏறக்குறைய 400 ஊழியர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட் டனர். திடீர் சோதனையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைச் சுங்கத் துறை நேற்று முன்தினம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.

சிங்கப்பூர் போலிஸ் படை, சுங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் கள்ள சிகரெட்டுகள் வைத்திருந்த 32 வெளிநாட்டு ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. படங்கள்: சிங்கப்பூர் சுங்கத்துறை ஃபேஸ்புக்

மேலும்