இளையரின் 8 சமூகத் திட்டங்கள்

இளையரின் 8 சமூகத் திட்டங்கள்

1 mins read
ffe4ccdb-a56c-4115-b6ed-194984b21573
-

சிங்கப்பூரில் உயிரை மாய்த்துக் கொள்ளும் ஏழு பேரில் ஐவர் ஆண்கள். மேலும் அவ்வாறான முடிவை எடுப்பவர்களில் அதிக மானோர் 20 வயதுக்கும் 29 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கம் (எஸ்ஓஎஸ்) தெரிவித்துள்ள தாக நேற்று முன்தினம் நடைபெற்ற சிண்டா இளம் தலைவர்கள் திட்ட பட்டமளிப்பு விழாவில் தெரிவிக்கப் பட்டது.

இந்தக் கவலைக்குரிய புள்ளி விவரங்களைக் கொண்டு இருவர் அடங்கிய குழு ஆலோசகர் ஒரு வரின் உதவியுடன், உதவித் திட் டம் ஒன்றை உருவாக்கியுள்ளது. "ஆண்கள் உணர்ச்சிகளை வெளிப்படையாகக் காட்டுவ தில்லை. அவர்கள் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்த ஒரு தளத்தை உருவாக்கியுள் ளோம்," என்றார் குழு உறுப்பினர் குமாரி தர்‌ஷினி, 21. "உயிரை மாய்த்துக்கொள்ளும் அபாயம் உடையவர்களை அடை யாளம் கண்டு, கவிதை மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்த அவர்களை ஊக்குவிக்கும் மின்நூலைத் தயாரிக்கவுள்ளோம்," என்று குழுவின் மற்றோர் உறுப் பினரான அல்வின் ஃபிலிப்ஸ், 20, கூறினார்.

'என்ஏப்லிங் வில்லேஜில்' நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துரையாடலின் பங்கேற்றவர்கள். இடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருது பெற்ற டாக்டர் குமரன் ராசப்பன், 'சொஸைட்டி ஸ்டேபிள்ஸ்' இணை நிறுவனர் ரெயன் இங், 'கேம்பஸ் சை' இணை நிறுவனர் சோ மிங் சியூ ஆகியோர். திவ்யா ‌ஷிவானி கோவிந்தராஜு கலந்துரையாடலை வழிநடத்தினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும்