கேர்‌ஷீல்டு லைஃப்; 2020ல் கட்டாய காப்புறுதித் திட்டம்

1 mins read

சிங்கப்பூரில் கடுமையான இய லாமை காரணமாக பாதிக்கப் பட்டு இருப்போருக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்தில், நீண்டகால தேசிய பராமரிப்பு காப்புறுதித் திட்டம் 2020ல் நடை முறைக்கு வருகிறது. 'கேர்‌ஷீல்டு லைஃப்' எனப் படும் அந்தப் புதிய அரசுத் திட் டம் கட்டாயமான ஒன்று. வரும் 2020வது ஆண்டில் 30 முதல் 40 வரை வயதுள்ள ஒவ்வொரு வரும் அந்தத் திட்டத்தில் தானா கவே சேர்த்துக்கொள்ளப்பட்டு தொகை செலுத்துவர். அடுத்தடுத்த வயதுப் பிரிவி னர் தங்கள் 30 வயதில் இத்திட் டத்தில் சேர்வர். இவர்களைப் பொறுத்தவரையில் இந்தப் புதிய திட்டம், இப்போது விருப்ப உரிமையாக உள்ள எல்டர்‌ஷீல்டு என்ற தனியார் காப்புறுதித் திட் டத்திற்குப் பதிலாக இடம்பெறும்.

மேலும் செய்திகள்