புக்கிட் தீமா ரோட்டின் 'மாறு பட்ட' பேருந்து நிறுத்தம் புத்தாக்க முறையில் நிலப் பற்றாக்குறையைப் போக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள் ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்திருக்கிறது. அந்தப் பேருந்து நிறுத்தத்தின் வடி வமைப்பு குறித்து இணையத் தில் எழுப்பப்பட்ட அக்கறை களுக்குப் பதிலளிக்-கும் வித மாக அமைச்சின் விளக்கம் அமைந்துள்ளது. பேருந்து நிறுத்தத்தின் படம் ஒன்றை மெய் ஷான் என்பவர் தமது ஃபேஸ்புக்கில் பதிவேற்றி யதைத் தொடர்ந்து பலரும் பேருந்து நிறுத்தம் குறித்து விமர்சிக்கத் தொடங்கினர். பேருந்து -நிறுத்தத்தில் கம்பித் தடுப்பு அமைக்கப்பட்டி ருப்பதால் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்தப்பட்ட விதம் தமக்குக் குழப்பத்தைத் தந்திருப்பதாக கடந்த புதன்கிழமை ஃபேஸ்புக்கில் மெய் ஷான் கூறியிருந்தார்.
ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட பேருந்து நிறுத்தப் படம். புக்கிட் தீமா சாலையில் அமைந்திருக்கும் இந்தப் பேருந்து நி-றுத்தம் அமைக்கப்பட்ட முறை குறித்து விமர்சனம் எழுந்துள்ளது. படம்: கூகல்

