கம்போடியாவில் பேருந்து விபத்து: சிங்கப்பூர் மாணவர்கள் காயம்

1 mins read

கம்போடியாவில் நிகழ்ந்த பேருந்து விபத்து ஒன்றில் 9 சிங்கப்பூர் மாணவர்கள் காயம் அடைந்தனர். மில்லினியா இன்ஸ்ட்டிடியூட் கல்வி நிலையத் தைச் சேர்ந்த 30 மாணவர்களும் நான்கு ஆசிரியர்களும் சென்ற பேருந்து ஞாயிற்றுக்கிழமை கம்போடியாவில் விபத்துக் குள்ளானது.

மாணவர்களை ஏற்றிக் கொண்டு நோம் பென் புறநகர் மாணவர் தங்கும் விடுதியில் இருந்து பின்புறமாக அந்தப் பேருந்து நகர்ந்து வெளியே வந்தபோது, ஒரு லாரி அதன் மீது மோதிவிட்டதாகத் தெரி கிறது. காயமடைந்த மாணவர் கள் ராயல் நோம் பென் மருத் துவமனையில் சிகிச்சை பெற்ற தாக அறியப்படுகிறது. அனைத்து மாணவர்களின் பெற்றோரையும் தொடர்புகொண் டுவிட்டதாக கல்வி நிலையத் தின் முதல்வர் திருமதி டான் வான் யூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சி டம் கூறினார்.

மேலும்