முதிய ஊழியரின் கவலைகள் அகல புதிய குழு அமைகிறது

முதிய ஊழியரின் கவலைகள் அகல புதிய குழு அமைகிறது

1 mins read
dd277d80-7f79-4059-8b24-73ebeae3fabb
-

சிங்கப்பூரின் மக்கள்தொகை மூப்பு அடையும் நிலையில், முதிய ஊழியர் களின் கவலைகளைப் போக்கும் விதமாக ஒரு புதிய பணிக்குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவில் தொழிற்சங்கங் கள், முதலாளிகள், அரசாங்கம் ஆகிய மூன்று தரப்புகளின் உயர் பேராளர்கள் அங்கம் வகிப்பார்கள். மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று இதனை அறிவித்தார். சிங்கப்பூரில் ஊழியர்களின் ஓய்வு வயது, அவர்களின் மறு வேலை நியமன வயது, ஆகியவை தொடர்பில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை கள் எடுக்கலாம் என்பது பற்றி அந்தப் பணிக்குழு முக்கியமாக ஆராயும். முதிய ஊழியர்களுக்கான மத்திய சேமநிதி சந்தா விகிதங்களையும் குழு பரிசீலனை செய்யும்.

மனிதவள அமைச்சின் பணித் திட்ட ஆய்வரங்கில் உரையாற்றிய அமைச்சர் திருவாட்டி டியோ, சிங்கப்பூர் முதலாளிகள், ஊழியர்கள் எதிர்நோக்கக்கூடிய சவால்களைக் கோடிகாட்டினார்.

சிங்கப்பூர் எக்ஸ்போவில் நேற்று நடந்த மனிதவள அமைச்சின் பணித் திட்ட ஆய்வரங்கில் மனிதவள அமைச்சர் திருவாட்டி ஜோசஃபின் டியோ, (இடது) முன்னாள் அமைச்சர் திரு லிம் சுவீ சேயை பாராட்டுகிறார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும்