ஜூரோங் வெஸ்ட்டில் போலிஸ் புகைப்படச் சாதனம் ஒன்றில் குறும்புத்தனம் செய்ததாகக் கூறப்பட்டதை அடுத்து சனிக்கிழமை 19 வயது பையன் கைதாகி இருக்கிறான். போலிஸ், சனிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களைத் தெரிவித்தது. ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 65ல் இருக்கும் 663டி புளோக்கில் அமைக்கப்பட்டுள்ள போலிஸ் புகைப்படச்சாதனம் ஒன்றின் கண்ணாடி மீது ஒட்டுச்சீட்டு ஒட்டப்பட்டு இருந்ததாக போலிசுக்கு தகவல் கிடைத்தது.
போலிஸ் புகைப்படச் சாதனத்தில் குறும்புத்தனம்; 19 வயது பையன் கைது
1 mins read

