முன்பைவிட அதிகமான சிங்கப் பூரர்களுக்கு ஒரு வகை குடல் அழற்சி நோய் ஏற்பட்டு இருப்பதாக தெரிய வந்து இருக்கிறது. அந்த நோய் உள்ளவர்களுக்குப் பெருங் குடல் புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்து அதிகம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சிங்கப்பூரில் ஐபிடி எனப்படும் குடல் அழற்சி நோய் கடந்த 10 ஆண்டில் அதிகரித்து இருக்கிறது. இது இங்குள்ள பல மருத்துவ மனைகளின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
சிங்கப்பூரில் குடல் அழற்சி நோய் பாதிப்பு அதிகரிப்பு
1 mins read

