வெளிநாட்டு ஊழியர் தங்குமிட விதிமீறல்: நிறுவனத்துக்கு $352,500 அபராதம்

வெளிநாட்டு ஊழியர் தங்குமிட விதிமீறல்: நிறுவனத்துக்கு $352,500 அபராதம்

1 mins read
b7ff02a9-2b95-46dd-8b1f-bdf50bf95803
-

செம்பவாங் கிரசெண்டில் தற்காலிக தங்குமிடங்களில் அளவுக்கு அதிக நெரிசல்மிகு சூழலில் தன் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்க வைத்திருந்ததற்காக கட்டுமானத் துறை நிறுவனம் ஒன்றுக்குச் சென்ற வியாழக்கிழமை $352,500 அபராதம் விதிக்கப்பட்டது. மனிதவள அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் இந்த விவ ரத்தைத் தெரிவித்தது. அதே தங்குமிடத்தில் இதர 17 முத லாளிகள், தங்களுடைய வெளி நாட்டு ஊழியர்களைத் தங்க வைக்க அந்த நிறுவனம் உடந்தை யாக இருந்திருக்கிறது என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

வெளிநாட்டு ஊழியர் தங்குமிடத்தில் சாக்கடை வசதிகளும் அவ்வளவாக சரியில்லை. போதிய கழிவறைகள் இல்லை. 200க்கும் அதிக ஊழியர்களுக்கும் பொதுவான ஒரு குளியல் இடம்தான் இருந்தது. படம்: மனிதவள அமைச்சு

மேலும்