மழை பெய்துகொண்டிருந்த சமயத் தில் பேருந்திலிருந்து இறங்கும் போது தனக்காகக் குடைபிடித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு ஊழி யரை சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் பாராட்டி அதுபற்றி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார். நிதி ஆலோசகராக பணியாற் றும் 27 வயது வின்சன் ஹெங்கை, வெளிநாட்டு ஊழி யரின் செயல் நெகிழ வைத்தது. அந்தச் சம்பவம், கடந்த திங்கட்கிழமை, செங்காங் ஈஸ்ட் புளோக் 323பிக்கு எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிகழ்ந்தது. மழை பெய்ததால் தமது வேலை யிலிருந்து சற்று ஓய்வெடுத்து கொண்டிருந்த அந்த ஊழியர் அவ்வாறு செய்திருக்கலாம் என்று திரு ஹெங் நம்புகிறார்.
அவருடன் இரண்டு வெளி நாட்டு ஊழியர்களும் சேர்ந்து கொண்டனர். அவர்களும் பேருந்திலிருந்து இறங்கும் பயணிகளுக்குக் குடை பிடித்துக்கொண்டிருந்தனர். "முதலில், பயணிகளுக்குக் குடை பிடிப்பது அவர்களுக்கு வேலையாகக் கொடுக்கப்பட்டது என எண்ணினேன்," என்று திரு ஹெங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
பேருந்துப் பயணிகளுக்குக் குடை பிடித்த வெளிநாட்டு ஊழியர்கள். படம்: ஃபேஸ்புக்/வின்சன் ஹெங்

