அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம் புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையி லான உத்தேச உச்சநிலை சந்திப் புக்கு வெள்ளை மாளிகை தயார் நிலையில் உள்ளது என்று வெள்ளை மாளிகை பேச்சாளர் சாரா சேண்டர்ஸ் கூறியுள்ளார். அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு அடுத்த மாதம் 12ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "உச்சநிலை சந்திப்புக்கான ஆயத்த பணிகளுக்காக நடை பெறும் பேச்சுவார்த்தைகள் சிறப் பாக நடைபெற்று வருகின்றன. அந்த ஆயத்தப் பணிகளுக்கான பேச்சுகள் இந்த வார இறுதியில் நடைபெறும்," என்று திருவாட்டி சேண்டர்ஸ், அமெரிக்க அதிபரின் அதிகாரத்துவ விமானமான ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர் களிடம் பேசினார்.
தயார்நிலையில் அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை
1 mins read

