மாதம் $1,300 வரை அடிப்படை ஊதியம் ஈட்டும் ஊழியர்களுக்கு $50 முதல் $70 வரை ஊதிய உயர்வு அளிக்க தேசிய சம்பள மன்றம் பரிந்துரைத்துள்ளது. ஒட்டுமொத்தத்தில், கிட்டத் தட்ட 150,000 முழு நேர ஊழியர் கள் இந்தப் புதிய அடிப்படை ஊதிய வரம்பின்கீழ் வருவர். வருடாந்திர ஊதிய வழிகாட்டி நெறிமுறைகளை நேற்று வெளி யிட்ட மன்றம், முதன்முறையாக சிறப்பு போனஸ் ஒன்றையும் முன் மொழிந்தது.
கடந்த ஆண்டில் உற்பத்தித் திறனில் வளர்ச்சியை எட்டிய நிறு வனங்கள், தங்களிடம் பணியாற் றும் குறைந்த வருமான ஊழியர் களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை யாக $300 முதல் $600 வரை கொடுக்கவேண்டும் என்று பரிந் துரைத்துள்ளது. அத்தொகை ஒரே முறையிலோ, தவணை முறையிலோ தரப்படலாம்.

