அரசியல் தலைமைத்துவப் புதுப்பிப்பு, அமைச்சரவை பதவி மாற் றங்கள் ஆகியவற்றுக்கு இடையில் நுட்பமான சமநிலை காணப்பட வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் புதன்கிழமை இரவு கூறினார். ஒருபக்கம், திடீர் தடங்கல்களை அரசாங்கம் தவிர்க்க வேண்டும். மறுபக்கம், அமைச்சர்களை அதே பதவியில் நீண்டகாலம் தக்க வைத்து, மற்றவற்றுடன் தொடர்பு இழக்கும் அபாயத்தையும் அரசாங்கம் தவிர்க்க வேண்டும். சென்ற மாத அமைச்சரவை மாற்றத்தின்போது ஓய்வுபெற்ற மூன்று அமைச்சர்களுக்காக நடத் தப்பட்ட பாராட்டு விருந்தில் பிர தமர் லீ பேசினார். "பிரதமராகத் தனக்குள்ள ஆகச் சிரமமான, அதே சமயத் தில் முக்கியமான பொறுப்புகளில்" அமைச்சரவை மாற்றமும் ஒன்று என்றார் அவர்.
முன்னாள் அமைச்சர்கள் லிம் ஹங் கியாங், யாக்கூப் இப்ராஹிம், லிம் சுவீ சே ஆகியோருடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார் பிரதமர் லீ சியன் லூங் (இடது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

