'பின்னடைவுக் கலாசாரத்தால் உருவாகும் மோசமான எதிர்காலம்'

'பின்னடைவுக் கலாசாரத்தால் உருவாகும் மோசமான எதிர்காலம்'

1 mins read
c96f7fcf-bdee-427b-9523-0e23bfe12c7f
-

இருபத்தோராம் நூற்றாண்டின் சவால்களைக் கையாள இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பாதி யின் உத்திகளுக்கு அப்பாற்பட்ட கொள்கைகளை அரசாங்கம் வகுக்க வேண்டும் என துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம் புதன்கிழமை வா‌ஷிங்டனில் கூறி னார். பதினெட்டாவது வருடாந்தர 'ஸ்டவ்ரொஸ் நியார்ச்சொஸ்' அற நிறுவன விரிவுரை ஆற்றிய திரு தர்மன், வளர்ச்சியடைந்த நாடுகளில் "நம்பிக்கையும் சாதகமான எதிர்பார்ப்புகளும் குன்றி" வருவதாகவும் சந்தை அடிப்படையாகக் கொண்ட தகுதிமுறை அங்கீகா ரத்தின்மீதான நம்பிக்கை இழக்கப் படுவதாகவும் எச்சரித்தார். கிழக்காசியாவுக்கு அப்பா லுள்ள வளரும் நாடுகளில், வளர்ச் சியடைந்த நாடுகளின் உற்பத் தித்திறன் நிலையும் சம்பள அள வும் எட்டப்படும் என்ற எதிர் பார்ப்புகள் நிறைவேறவில்லை என் றும் அவர் கூறினார்.

துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னம். படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

மேலும்