ஏப்ரலில் 0.8% அதிகரித்த வங்கிக் கடன்கள்

1 mins read
59ee9fef-02e0-41ce-ad4b-bcea127e98d3
-

சிங்கப்பூரில் வங்கிக் கடன் கொடுத்தல் ஏப்ரலில் 0.8% அதிகரித்திருக்கிறது என்று சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. உள்ளூர் வங்கி பிரிவின்வழி கொடுக்கப்படும் கடன்களின் பெறுமானம் ஏப்ரலில் $667 பில்லியனாக உள்ளது. அதற்கு முந்தைய மாதத்தின் கடன்கள் $662 பில்லியன் பெறுமானம் உள்ளவை. இந்த வளர்ச்சி, பிப்ரவரிக்கும் மார்ச்சுக்கும் இடையிலான 1.6% வளர்ச்சியுடன் குறைவு. வர்த்தக கடன்களின் வளர்ச்சி குறைந்திருப்பதாக இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மேலும்