ஒட்டுமொத்த மேம்பாட்டுத் திட்டம்: மூன்று புளோக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

1 mins read

மெக்பர்சன் லேனில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒட்டுமொத்த மேம்பாட்டுத் திட்டத்திற்கு மூன்று புளோக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை புளோக் 81, 82, 83 ஆகியனவாகும். அந்தக் கட்டடங் கள் கட்டி ஏறக்குறைய 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த புளோக்குகளில் 313 வீடுகளும் 27 கடைகளும் இரண்டு உணவகங்களும் உள்ளன. இந்த புளோக்குகளில் குடி யிருப் போருக்கு அந்த வட்டாரத்திற்கு அருகிலேயே புதிய வீடுகள் கொடுக்கப்படும். அருகேயுள்ள சர்கியூட் ரோட்டில் இரண்டறை 'ஃப்ளக்ஸி' வீடுகள் முதல் 5 அறை வீடுகள் வரை 630 வீடுகள் கட்டப்படும். இந்த வீடுகளே குடியிருப்பாளர் களுக்கு மாற்று வீடுகளாக அளிக்கப்படும். இந்தப் புதிய புளோக்குகள் 2023ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று வீவக தெரிவித்தது.

மேலும்