'கற்பித்தல் முறை மாறினாலும் பள்ளிகள் தொடரும்'

'கற்பித்தல் முறை மாறினாலும் பள்ளிகள் தொடரும்'

1 mins read

தொழில்நுட்ப மாற்றம், கல்வி உட்பட பல்வேறு துறைகளில் எழுச்சியை உண்டாக்கினாலும், பள்ளிகள் கற்றலுக்குத் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பெற்றிருக்கும் என்று கல்வி அமைச்சர் திரு ஓங் யி காங் கூறினார். கற்பித்தலைத் தொழில்நுட்பம் உருமாற்றினாலும் பள்ளிகள் தொடர்ந்து இருக்கும் என்று அவர் கூறினார். "விழுமியங் களைப் பகிர்வது, சக மாணவர்கள் தங்களுக்கிடையில் கற்பது, ஆசிரியர்கள், விரிவுரையாளர் களிடம் கற்பது, குழுக்களாக இணைந்து பணியாற்றுவது போன்றவற்றுக்கு மாற்று முறைகள் இல்லை," என்று திரு ஓங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கற்பித்தலில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை கல்வியமைச்சு தொடர்ந்து ஆதரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும்