சிங்கப்பூரும் இந்தியாவும் இரு தரப்பு பொருளியல் உடன்பாடு குறித்த மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தைகளை விரைவில் தொடங்கவுள்ளன. சிங்கப்பூர் வந்திருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யும் பிரதமர் லீ சியன் லூங்கும் அதிபர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விரிவான பேச்சு வார்த்தைகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர். சிங்கப்பூர் = இந்தியா இடையே பொருளியல் உறவு களை பலப்படுத்தவும் தற்காப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இருநாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். சிக்கா எனப்படும் முழுமை யான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாட்டின் இரண்டாவது ஆய்வு முடிந்துவிட்டதாக அறி வித்த பிரதமர் லீ, இருநாட்டுப் பொருளியல் உறவுகள் குறிப் பிடத்தக்க அளவு உள்ளது என் றும் இருநாடுகளும் இணைந்து மேலும் பலவற்றை செய்ய விரும்பு வதாகவும் கூறினார். "உடன்பாட்டை சீரமைப்பது, மேம்படுத்துவது குறித்து அதி காரிகள் விரைவில் விவாதிக்கத் தொடங்குவார்கள்," என்றும் திரு மோடி கூறினார்.
இஸ்தானாவில் நேற்று கூட்டு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் கைகுலுக்கிக் கொண்டனர். திரு மோடியின் வருகை சிங்கப்பூர்=இந்தியா இடையிலான இருதரப்பு பொருளியல் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது. மூன்று நாள் வருகையின் போது பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரு மோடி, பல்வேறு புரிந்துணர்வுக் குறிப்புகள் கையெழுத்தாவதையும் பார்வையிட்டார். படம்: ராய்ட்டர்ஸ்

