நீர் அழுத்தத்தால் ஆடம் சாலையில் விரிசல்கள்

நீர் அழுத்தத்தால் ஆடம் சாலையில் விரிசல்கள்

1 mins read
946fb237-ad69-48fb-a4f0-883b66b47a7b
-

ஆடம் சாலையின் இரண்டு தடங் களில் திடீரென வெடித்த விரிசல் களால், நேற்றுக் காலை பார்ட்லி, சிரங்கூன் ஆகிய பகுதிகள் வரை பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புக்கிட் பிரௌன் சாலைக்கு அருகில் உள்ள கட்டுமானத் தளத் தின் அருகே அந்த விரிசல்கள் தோன்றியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்தது. "புக்கிட் பிரௌன் சாலையில் நிலத்தடி சுரங்கப்பாதை அமைப்ப தற்காக அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த பெரிய நில அகழ் வுக்குப் பக்கத்தில் ஏற்பட்ட நீர் அழுத்தமே சாலையில் ஏற்பட்ட விரிசல்களுக்குக் காரணம்.

அந்த நீர் அழுத்தம் கடும் மழையால் ஏற்பட்டிருக்கலாம்," என்று ஆணையம் தெரிவித்தது. பூமிக்கு அடியில் உள்ள நிலப்பகுதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அந்த விரிசல்கள் நிகழ்ந்தததாக அறியப்படுகிறது. அந்த நிகழ்வு எதனால் ஏற்பட்டது என்பது உறுதி செய்யப்படவில்லை.

புக்கிட் பிரௌன் சாலைக்கு அருகில் உள்ள கட்டுமானத் தளத்துக் குப் பக்கத்தில் சாலை விரிசல்கள் ஏற்பட்டன. படம்: வான் பாவ்

மேலும்