மத்திய விரைவுச் சாலையிலுள்ள சுரங்கச்சாலை ஒன்றில் கார் தலைகீழாகக் கவிழ்ந்ததைத் தொடர்ந்து மெர்ச்சண்ட் ரோட் டுக்கு அருகிலுள்ள நுழைவாயில் தற் காலிகமாக மூடப் பட்டிருந்தது. ஆயர் ராஜா விரைவுச்சாலையை நோக்கிச்செல்லும் அந்தச் சுரங்கச்சாலையில் விபத்து நடந்ததாகவும் அந்த நுழைவாயில் மூடப்பட்டதாகவும் நிலப் போக்குவரத்து ஆணையம் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்றுக் காலை 10 மணிக்கு செய்தி வெளியிட்டது.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்