'உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துங்கள்'

'உங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துங்கள்'

1 mins read
79585bab-27e9-4b5e-8019-78afc3db4933
-

கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக் கும் இடையிலான அதிவேக ரயில் திட்டம் குறித்து மலேசிய அரசாங் கத்திடமிருந்து தெளிவான விளக் கத்தை சிங்கப்பூர் எதிர்பார்க்கும் அதே வேளையில், சிங்கப்பூருக்கு இத்திட்டத்துக்கான செலவினம் தொடர்ந்து அதிகரித்துக் கொண் டிருப்பதாக போக்குவரத்து அமைச் சர் கோ பூன் வான் தெரிவித்து உள்ளார். இந்த 350 கிலோ மீட்டர் தூர அதிவேக ரயில் திட்டத்தை கைவிடப் போவதாக மலேசியப் பிரதமர் மகாதீர் முகமதின் அர சாங்கம் முடிவெடுத்திருப்பது குறித்து ஊடகங்களில் செய்திகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து திரு கோ கருத்துரைத்தார்.

இத்திட்டம் குறித்து மலேசியா கொண்டிருக்கும் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு அரசதந்திர வழிகள் மூலம் சிங்கப்பூர் கேட்டுக் கொண்டுள்ளதாக உள்கட்டமைப் புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு கோ கூறினார். சிங்கப்பூருக்கு செலவினம் தொடர்ந்து அதிகரித்துக் கொண் டிருப்பதாக மலேசியாவிடம் சிங்கப்பூர் தெரிவித்துள்ளதாகவும் சொன்ன திரு கோ, இந்தச் செல வுகள் பற்றிய விவரங்களை வெளி யிடவில்லை.

போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும்