சிங்கப்பூரை சார்ந்த வாகனப் பகிர்வு நிறுவனமான 'கார்டி', இம்மாதம் 5ஆம் தேதி இங்கு அதன் சேவையைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. மலிவுக் கட்டண கார் சேவை கள் முதல் சொகுசு தானியார் வாடகைக் கார் சேவைகள் வரை அந்நிறுவனம் வழங்கும். தென்கிழக்காசியாவிலிருந்து ஊபர் நிறுவனம் வெளியேறியதை அடுத்து அது விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்ப முனைகிறது கார்டி. ஊபர் செயலி கடந்த மாதம் அதன் செயல்பாடுகளை நிறுத்திக்கொ ண்டது.
கார்டி நிறுவனத்தைத் தோற்று வித்தவர் 27 வயது தொழில்மு னைவரான அஷ்வின் சிதம்பரம். கார்டி செயலியில் உள்ளடங்கும் சேவைகள் குறித்த மேல் விவரங்கள் நாளை அறிவிக்கப் படும் என ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அவர் கூறினார்.

