சிங்கப்பூர் அதன் முதல் மின்னி லக்கத் தயார்நிலை செயல்திட் டத்தைத் தொடங்கி வைத்து உள்ளது. அதில், மின்னிலக்கப் பொரு ளிய லுக்காக சிங்கப்பூரர்களைத் தயார் படுத்தும் நோக்கில் அரசாங் கம் எடுத்துவரும் முயற்சிகள் பட்டிய லிடப்பட்டுள்ளன. தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் அந்தச் செயல் திட்டத்தை நேற்று அதிகாரபூர்வமா கத் தொடங்கி வைத்தார்.
மின்னியல் பொருளியலுக்குத் தயாராகும் உத்திகளும் மின்னில க்கத் தயார்நிலை பணிக் குழு முன்வைத்த பரிந்துரைகளும் அதில் அடங்கியிருப்பதாக திரு ஈஸ்வரன் குறிப்பிட்டார். அந்தக் பணிக்குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது.

