குழந்தைகள் வளர்வதற்கான சிறந்த நாடாக சிங்கப்பூர் மதிப் பிடப்பட்டிருப்பது, 'பின்னணி எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தைக்கும், இயன்றவரை, மிகச் சிறந்த வாழ்க்கைத் தொடக் கத்தை அளிப்பதன்' வெற்றியைப் பிரதிபலிப்பதாக பிரதமர் லீ சியன் லூங் நேற்று கூறினார். 'சேவ் தி சில்ட்ரன்' எனும் அரசு-சாரா அமைப்பு அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் 'குழந் தைகள் வளர சிறந்த நாடாக' சிங்கப்பூர் முதலிடம் பிடித்திருப் பதை அறிந்து மகிழ்ச்சி கொள்வ தாகப் பிரதமர் தமது 'ஃபேஸ்புக்' பதிவில் குறிப்பிட்டிருந்தார். ஸ்லோவேனியாவும் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந் தைகளின் இறப்பு விகிதம், குழந்தைகளின் வளர்ச்சி விகிதம், பள்ளிகளுக்குச் செல்லாத குழந் தைகள் மற்றும் இளையோர், குழந்தைத் தொழிலாளிகள், குழந்தைத் திருமணம், வளரிளம் பருவத்தினருக்குக் குழந்தைப் பிறப்பு விகிதம், சச்சரவுகளால் இடம்பெயரும் மக்கள், குழந்தைக் கொலை விகிதம் ஆகிய எட்டு குறியீடுகளின் அடிப்படையில் 175 நாடுகள் இந்த மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டன.

