ஊழியர் மீது வாகனத்தை ஏற்றிய ஓட்டுநருக்குச் சிறை

ஊழியர் மீது வாகனத்தை ஏற்றிய ஓட்டுநருக்குச் சிறை

1 mins read

பாரந்தூக்கி ஒன்றை ஓட்டி சக ஊழியரைக் காயப்படுத்திய ஃபூ கியேன் ஹாவ்வுக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டடுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று, ஜாலான் பூன் லேக்கு அருகிலுள்ள ஸ்டி பேப்பர் ரிசோசர்ஸில் 29 வயது ஃபூ பாரந்துக்கி ஓட்டுநருக்காகக் காத்திருந்தார். சுமார் அரை மணி நேரம் ஆகியும் அவர் வரவில்லை. சலிப்படைந்த ஃபூ, அருகில் இருந்த பாரந்தூக்கியை ஓட்டத் தொடங்கினார். தனது லாரியை நோக்கி அவர் அதனை ஓட்டிக் கொண்டிருந்தபோது வழியில், தரையில் அமர்ந்து கொண்டிருந்த 54 வயது திரு யான் சென்யிங் மீது பாரந்தூக்கியை ஏற்றினார்.

மேலும்