போலிஸ் ஆள்மாறாட்ட மோசடி: தைவானிய ஆடவருக்குச் சிறை

போலிஸ் ஆள்மாறாட்ட மோசடி: தைவானிய ஆடவருக்குச் சிறை

1 mins read

போலிஸ் அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த 53 வயது தைவானிய ஆடவருக்கு ஆறரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அந்தக் கும்பல் இதுவரை ஏறத்தாழ $1 மில்லியனைச் சுருட்டி உள்ளது. ஹுவாங் யின் சுன் என்ற அந்த ஆடவர், கடந்தாண்டு ஜூன் மாதத்தில் சட்டவிரோதக் கும்பலில் சேர்ந்தார். சிங்கப்பூருக்குச் சென்று சில ஆவணங்களைப் பெற ஹுவாங் கிற்கு உத்தரவிடப்பட்டது. ஹுவாங், தன்னுடன் குற்றஞ் சாட்டப்பட்ட 34 வயது சென் பெங் யூவுடன் கடந்தாண்டு ஜூன் 21ல் சிங்கப்பூருக்கு வந்தார். ஆவணங்களுக்குப் பதிலாக $50,000 பெறுமானமுள்ள நோட் டுகள் கட்டுக்கட்டாக இருந்த தைக் கண்டார்.

மேலும்