பாலியல் குற்றங்களை ஒப்புக்கொண்ட முன்னாள் தேசிய விளையாட்டாளர்

1 mins read

முன்னாள் தேசிய பூப்பந்து விளையாட்டாளர் ஏஷ்டன் சென் யோங்சாங், வயது குறைந்த பெண்ணுடன் பாலியல் உறவு கொண்ட குற்றத்தை ஒப்புக் கொண்டதாக மாவட்ட நீதிமன் றத்திடம் தெரிவிக்கப்பட் டுள்ளது. $15,000 பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், ஜூன் 27ல் நீதிமன்றத்திற்குத் திரும்ப வேண்டும். 2014ல், குற்றத்தைச் செய்த 28 வயது சென், இவ்வாண்டு ஏப்ரலில் கைது செய்யப்பட்டார். சென்னுக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான உறவு எத்தகையது என்பதை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை. 13 வயது பெண்ணுடன் சென், தெம்பனிஸ் ஸ்திரீட் 91ல் தகாத உறவில் ஈடுபட்டாதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும்