சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம்மும் சந்திக்கும் முக்கிய நிகழ்வு குறித்து தகவல்களை சேகரிப்பதற்காக உலக நாடுகளி லிருந்து 3,000க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் சிங்கப்பூர் வரு வார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது. இதையொட்டி சிங்கப்பூர் அர சாங்கம் அவர்களுக்குத் தேவை யான வசதிகளை செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக 'எஃப்1' கார் பந்தயத்திற்கான கட்டடம் செய்தியாளர்களின் நிலையமாக மாற்றப்பட்டுவருகிறது. சிங்கப்பூருக்கு வரும் ஏராள மான செய்தியாளர்களை சமாளிக் கும் வகையில் புதிய நிலையம் தயாராகிவருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் செப்டம்பரில் நடைபெறும் 'எஃப்1' கார் பந்தயப் போட்டிக்கு இதே கட்டடத்தில்தான் செய்தியாளர்கள் செய்திகளை சேகரிப்பது வழக்கம்.
டிரம்ப்-கிம் சந்திப்பு: செய்தியாளர்கள் நிலையமாக மாறும் 'எஃப்1' கட்டடம்
1 mins read

