பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுப்புறம் பாதிக்கப்படுவது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக பிளாஸ்டிக் பொருட்களால் செய்யப்பட்ட அலங்கார சுவரை சுகாதார, சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் திறந்து வைத்தார். இந்த முயற்சிக்கு பயன் படுத்தப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை மரினா பே சேண்ட்ஸ், டிஎஸ்எம், ஹில்ட்டன் ஆகியவை வழங்கி கைகொடுத்துள்ளன. பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி, மறுபயனீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
பிளாஸ்டிக் பொருட்களின் விளைவுகளை உணர்த்தும் சுவர்
1 mins read
-

