கிரேஸ் ஃபூ: தொண்டூழியம் 70 விழுக்காடாக வேண்டும்

கிரேஸ் ஃபூ: தொண்டூழியம் 70 விழுக்காடாக வேண்டும்

1 mins read

சிங்கப்பூரில் மூப்படையும் மக்கள் தொகை அதிகரித்துவருவதால் அவர்களுக்கான தொண்டூழியம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 70 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் கிரேஸ் ஃபூ அறைகூவல் விடுத்துள்ளார். தற்போது மூப்படையும் மக்கள் தொகைக்கான தொண்டூழியம் மூன்றில் ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது. இது 70 விழுக்காடாக அதிகரிப்பது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். "ஒவ்வோர் வீட்டுக்கும் ஒரு தொண்டூழியர் என்ற எண்ணத் தோடு சிங்கப்பூர் உதவி செய்யும் நாடாக வளர்ச்சி யடைய வேண் டும்," என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஆசிய நன்கொடையாளர் கட்டமைப்பு மாநாட்டில் அமைச்சர் கிரேஸ் ஃபூ பேசினார்.

மேலும் செய்திகள்