காளான் வேர்களும் ஒருநாள் உங்கள் வீட்டைக் கட்ட பயன்பட லாம். காங்ரீட்டைவிட வலுவான, விலை குறைவான கட்டுமான பொருளாக வேளாண்மை கழிவு மாற்றப்படலாம் என்று நேற்று நடைபெற்ற தெமாசெக் சுற்றுச் சூழல் வள மாநாட்டில் 'மைகோ டெக்' எனும் இந்தோனீசிய நிறு வனம் செயல்முறைப்படுத்திக் காட் டியது. சன்டெக் மாநாட்டு மண்ட பத்தில் நடைபெற்ற இந்த ஒரு நாள் மாநாட்டில் பல பசுமை புத் தாக்கப் படைப்புகள் இடம் பெற் றன. இம்மாநாடு ஐக்கிய நாடுகள் உலகச்சுற்றுச்சூழல் தினம் தொடர்பாகவும் ஏற்பாடு செய்யப் பட்டது. நிலைத்தன்மை வாய்ந்த மேம்பாட்டை பற்றி கலந்துரையாட 23 நாடுகளைச் சேர்ந்த 600 பிரதி நிதிகளை மாநாடு ஈர்த்தது.
சுற்றுச்சூழல் மாநாட்டில் புத்தாக்கப் படைப்புகள்
1 mins read