சிறப்பு நிகழ்வு வட்டாரமாக அறிவிக்கப்பட்ட செந்தோசா

சிறப்பு நிகழ்வு வட்டாரமாக அறிவிக்கப்பட்ட செந்தோசா

1 mins read

சிங்கப்பூரில் வரும் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்கும் வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கு இடையிலான உச்சநிலை மாநாட்டுக்காக செந்தோசா தீவு ஒதுக்கப் பட்டுள்ளதாக நேற்று அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. ஷங்ரிலா ஹோட்டலைச் சுற்றியுள்ள வட்டாரத்தை 'சிறப்பு நிகழ்வுக்கான வட்டாரம்' என்று நேற்று முன்தினம் அறிவிக்கப் பட்டதை அடுத்து செந்தோசா பற்றிய அறிவிப்பு நேற்று வெளி யிடப்பட்டது.

பொது ஒழுங்கு சட்டத்தின்கீழ் வெளியிடப்பட்ட அரசிதழில் இம்மாதம் 10ஆம் தேதியிலிருந்து 14ஆம் தேதி வரை செந்தோசா தீவு முழுவதும், அதன் தென் மேற்கு கடற்பகுதிகளும் சிறப்பு நிகழ்வு வட்டாரங்களாக அறிவிக் கப்பட்டுள்ளன. செந்தோசாவில் அமைந்துள்ள 'தி கப்பேல்லா' ஹோட்டலில் டிரம்ப்=கிம் உச்சநிலை மாநாடு நடைபெறக்கூடும் என்று பேசப் படுகிறது.

மேலும் செய்திகள்