மக்கள் செயல் கட்சியின் முன்னோடித் தலைவர் ஜெக் யுவன் தோங் காலமானார்

மக்கள் செயல் கட்சியின் முன்னோடித் தலைவர் ஜெக் யுவன் தோங் காலமானார்

1 mins read
18406f65-ed98-4dc4-a609-969d12402570
-

சிங்கப்பூரின் முன்னோடித் தலை வர்களில் ஒருவரான திரு ஜெக் யுவென் தோங் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவரது புக்கிட் தீமா இல் லத்தில் காலமானார். அவருக்கு வயது 87. திரு ஜெக் அவரது மனைவி திருவாட்டி ஹுவாங் கெக் சீ, 84, இரு மகன்களான திரு கியன் ஜின், 59, திரு கியன் யீ, 55, ஐந்து பேரப்பிள்ளைகள் ஆகியோ ரைவிட்டுச் செல்கிறார். திரு ஜெக் கடைசியாக சிங்கப் பூரின் பொன்விழா ஆண்டில் தேசிய தின அணிவகுப்பில் கலந்துகொண்டதைத் தொடர்ந்து அவரது உடல்நிலை பலவீனமான தாக அவரது மகன் திரு கியன் யீ கூறினார். "தந்தைக்கு வயது ஏறிக்கொண் டிருந்தது. அவருக்கு பல்வேறு நோய்கள் இருந்தன. அவர் தூக் கத்தில் அமைதியான முறையில் காலமானார். இறுதி வரை குடும் பத்தினர் அவருடன் இருந்தனர்," என திரு கியன் யீ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.

மறைந்த திரு ஜெக் யுவென் தோங். படம்: சாவ் பாவ்

மேலும் செய்திகள்