ரயில் நிலையம் ஒன்றில் நேற்றுக் காலை இலேசான வெண்புகை வெளியானதையடுத்து தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் பயணிகள் கீழே இறங்கவேண்டி இருந்தது. இது பற்றி கேட்டபோது, தஞ்சோங் பகார் எம்ஆர்டி நிலையத்தில் நேற்றுக் காலை சுமார் 9.45 மணிக்கு ஒரு ரயில் வண்டி நின்றிருந்தபோது அதன்கீழ் பக்கத்திலிருந்து வெண்புகை கிளம்பியதை ஊழியர் ஒருவர் பார்த்ததாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது. குளிர்சாதனத்திலிருந்து கிளம்பிய வாயுதான் அந்த வெண்புகைக்கு காரணம் என்பது தெரியவந்தது.
ரயிலில் வெண்புகை: தஞ்சோங் பகார் நிலையத்தில் பயணிகள் கீழே இறக்கம்
1 mins read
-

