சிறு நிறுவனங்களுக்கு மேலும் வாய்ப்புகள்

1 mins read

சிங்கப்பூர் அரசாங்கம் புதிய நிதி ஆண்டுக்கான தகவல் தொழில் நுட்பச் செலவினத்தை $2.4 பில்லியனிலிருந்து $2.6 பில்லிய னாக அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு மேலும் பல வாய்ப்புகள் கிடைக்கவிருக் கின்றன. அரசாங்க தொழில்நுட்ப முகவை (GovTech) நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அரசாங்கம், 2017 நிதி ஆண் டில் கொடுத்த தகவல் தொடர்பு தொழில்நுட்ப உடன்பாடுகளில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு சிறிய, நடுத்தர நிறுவனங் களுக்குக் கிடைத்தன என்பது அந்த அறிக்கை மூலம் தெரிய வருகிறது.

அதாவது சுமார் $800 மில் லியன் மதிப்புள்ள குத்தகைகளை இத்தகைய நிறுவனங்கள் பெற்றன. அந்த நிதி ஆண்டிற்கு அரசாங்கம் ஒதுக்கிய $2.4 பில்லியன் தொகை யிலிருந்து இது கிடைத்தது. இதே கொள்முதல் போக்கு 2018 நிதி ஆண்டிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அர சாங்க தொழில்நுட்ப முகவை தெரிவித்துள்ளது. துணைப் பிரதமர் டியோ சீ ஹியன், அரசாங்க மின்னியல் திட்டத்தை வெளியிட்டார். அதற்குச் சில நாட்கள் கழித்து, அரசு கொள்முதல் திட்டங்கள் வெளியிடப்பட்டன.

மேலும் செய்திகள்