பயங்கரவாத சந்தேகப் பேர்வழி இங்கு நுழைய அனுமதி மறுப்பு

1 mins read
c04de207-b7a9-4185-b16d-704c01e59117
-

ஆஸ்திரேலியாவின் பயங்கர வாதச் சட்டத்தின்கீழ் குற்றஞ்சாட் டப்பட்ட முதல் ஆடவரான ஸெக்கி மல்லா (படம்), சிங்கப்பூருக்குள் நுழையவிருந்தபோது தடுக்கப் பட்டுள்ளார். 34 வயது மல்லா, சிட்னியி லிருந்து இங்கு விமானம் வழி யாக நேற்று முன்தினம் வந்ததாக வும் விமான நிலையத்தில் அவர் தடுக்கப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித் தார். ஸெக்கி நேற்றுக் காலை ஆஸ்திரேலியாவுக்குத் திரும்ப அனுப்பப்பட்டார். 2003ஆம் ஆண்டில், ஆஸ்தி ரேலிய பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பிலும் வெளியுறவு அமைச் சிலும் ஸெக்கி தாக்குதல் நடத் தத் திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட் டப்பட்டார்.