தனிநபர் நடமாட்டக் கருவிகளை (PMD) ஓட்டுவதன் தொடர்பிலான கடுமையான விதிமுறைகள் நடப்புக்கு வந்து சுமார் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியுள்ள வேளையில் 322 பேர் 'பிஎம்டி' தொடர்பிலான பல்வேறு குற்றங்க ளுக்காக பிடிபட்டுள்ளனர். தீவு முழுவதும் தனிநபர் நட மாட்ட அமலாக்க அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக் கைகள்வழி இவர்கள் பிடிபட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமை அன்று தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண் டது.
பிடோக் ரெசவோர், கேலாங், காக்கி புக்கிட், ஜூரோங் முதலிய வட்டாரங்களில் அதிகாரிகள் இச் சோதனையை மேற்கொண்டனர். மே மாதம் ஒன்றாம் தேதி முதல் தனிநபர் நடமாட்டச் சட் டத்தின்கீழ் மிதிவண்டிகள், தனிநபர் நடமாட்டக் கருவிகள், மின்சக்தியால் இயங்கும் மிதி வண்டிகள் ஆகியவற்றின் விற்ப னையும் பயன்பாடும் கட்டுப்படுத் தப்பட்ட பின்னர் இச்சோதனை நடத்தப்பட்டது.
தீவு முழுவதும் தனிநபர் நடமாட்ட அமலாக்க அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகள் மூலம் இதுவரை மொத்தம் 292 கருவிகள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. படம்: ஃபேஸ்புக்/நிலப் போக்குவரத்து ஆணையம்

