நடுநிலைத்தன்மை, பாதுகாப்பு

நடுநிலைத்தன்மை, பாதுகாப்பு

1 mins read

டிரம்ப்-கிம் உச்சநிலை மாநாட்டை நடத்துவதற்கு சிங்கப்பூர் தேர்ந் தெடுக்கப்பட்டதற்கு அதன் நடுநிலைத்தன்மையும் போதிய பாதுகாப்பை சிங்கப்பூர் வழங்க முடியும் என்பதும் முக்கிய காரணங்கள். அமெரிக்காவுடன் நெருங்கிய அரசதந்திர உறவுகளை சிங்கப்பூர் கொண்டுள்ள அதே வேளையில் வடகொரியாவுடனும் சுமுகமான உறவைக் கொண் டுள்ளது. வடகொரியாவின் தூதரக அலுவலகம் சிங்கப்பூரில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் உகந்த, மாநாட்டை நடத்துவதற்கான வசதியான சூழலை சிங்கப்பூர் வழங்குகிறது. சீன அதிபர் ஸி ஜின்பிங், தைவான் அதிபர் மா யிங்-ஜியூ ஆகியோருக்கு இடையிலான மாநாட்டை 2015ஆம் ஆண்டு சிங்கப்பூர் நடத்தியது. அதேபோல, 1993ஆம் ஆண்டு சீனாவுக்கும் தைவானுக் கும் இடையே வாங்-கூ பேச்சுவார்த்தையும் சிங்கப்பூரில் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்