நம்பிக்கையை வளர்க்க முதல்படியாகும் சந்திப்பு

நம்பிக்கையை வளர்க்க முதல்படியாகும் சந்திப்பு

1 mins read

1950ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி தென்கொரியா மீது வடகொரியா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1953ஆம் ஆண்டில் வடகொரியா, சீனா, அமெரிக்கா வழிநடத்திய ஐநா படை ஆகியவற்றுக்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் உருவாகியது. ஆனால், இன்றைய நிலவரப்படி இரு கொரியாக் களுக்கிடையே சுமுகமற்ற நிலை உள்ளது. கடந்த சுமார் 30 ஆண்டுகளில் அணுவாயுதத் திட்டத்தைத் தொடங்கிய வடகொரியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள், ஐநா அமைப்பு ஆகியன தடைகளை விதித்து அணுவாயுதத்தைக் கைவிடக் கோரின. ஆனால் அவை முழுமையான பலனைத் தரவில்லை. பல விவாதங்கள் நடந்தபோதும் அவநம்பிக்கையும் தவறான புரிதல்களும் வளர்ந்தே வந்துள்ளன.

"இவை அனைத்தையும் ஒரே சந்திப்பில் மாற்றிவிட முடியாது," என்று செய்தியாளர்களிடையே நேற்று காலை பேசியபோது பிரதமர் லீ சியன் லூங் குறிப்பிட்டார். நாளை நடைபெறவுள்ள டிரம்ப்- கிம் உச்சநிலை மாநாடு நம்பிக் கையை வளர்ப்பதற்கான முதல்படி என்றார் அவர். முழுமையான சரிபார்க்கத்தக்க, மாற்றமுடியாத அணுவாயுத ஒழிப்பு நடைபெற் றுள்ளது என்று கூறுவதற்கு சற்று காலம் பிடிக்கும் என்றும் திரு லீ கூறினார்.

மேலும் செய்திகள்