சிங்கப்பூரில் நாளை அமெரிக்கா- வடகொரியா உச்சநிலை சந்திப்பு நடக்கவிருக்கிறது. அதற்குச் சில நாட்களுக்கு முன் இங்கு வர முயன்ற குறைந்தபட்சம் நால்வரை சிங்கப்பூர் திருப்பி அனுப்பி இருக் கிறது என்று உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். ஆசியான் நாடு ஒன்றைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் பதற்றத் துடன் காணப்பட்டதையடுத்து சனிக்கிழமை சிங்கப்பூருக்குள் அவர் அனுமதிக்கப்படவில்லை.
குடிநுழைவு, சோதனைச்சாவடி அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவரால் பதிலளிக்க முடிய வில்லை. அவரின் கைத்தொலை பேசியைச் சோதித்தபோது தற் கொலை குண்டுவெடிப்பு பற்றிய இணையப் பக்கங்களை அவர் பார்த்திருந்தது தெரியவந்தது என்றார் அமைச்சர் சண்முகம். ஆஸ்திரேலியரான செக்கி மல்லா, 34, என்பவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதர இருவரும் அனுமதிக்கப்படவில்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.

