அதிபர் டிரம்ப்-வட கொரியத் தலைவர் கிம் உச்சநிலை சந்திப்பினால் கொரிய போருக்கு முடிவு ஏற்படும் என்று தென் கொரிய அரசாங்கப் பேச்சாளர் நேற்று நம்பிக்கை தெரிவித்தார். தமது நாடு உண்மை யிலேயே தீவிரமாக பேச்சு வார்த்தையில் ஈடுபட விரும்பு கிறது என்பதைக் காட்ட திரு கிம் விரும்புகிறார். மேலும் கிம் அறிவார்ந்தவர். பேச்சுவார்த்தையில் நல்ல முறையில் ஈடுபடக் கூடியவர் என்றும் அந்த உயர்மட்ட அதிகாரி குறிப்பிட்டார். அண் மையில் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னை திரு கிம் சந்தித்ததை அடிப்படையாக வைத்து இவ்வாறு அந்த அதிகாரி கிம்மை மதிப் பிட்டிருந்தார். இந்நிலையில் சிங்கப்பூர் வந்துள்ள தென்கொரிய பேராளர் குழு, அமெரிக்க-வடகொரிய அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையை நேற்று மிகவும் உன்னிப்பாகக் கவனித்தது.
'போருக்கு முடிவு ஏற்படும்'
1 mins read

