அமெரிக்க-வடகொரிய அதிகாரிகள் கடைசி நேர ஆலோசனை

அமெரிக்க-வடகொரிய அதிகாரிகள் கடைசி நேர ஆலோசனை

1 mins read
8c9f88f5-573d-4063-ac64-fd3dff400ee2
-

அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னும் சந்திப்பதற்கு முன்பு நேற்று த ரிட்ஸ்-கார்ல்டன், மில் லெனியா சிங்கப்பூர் ஹோட்டலில் இரு நாட்டின் அதிகாரிகள் கடைசி கட்ட ஆலோசனையில் ஈடுபட்ட னர். இந்தக் கூட்டத்திற்கு பிலிப் பீன்சுக்கான அமெரிக்க தூதர் சங் கிம் தலைமை தாங்கினார் என்று நம்பப்படுகிறது. இதில் வடகொரியா சார்பில் உதவி வெளியுறவு அமைச்சரான சோ சன் ஹுய் பங்கேற்றார்.

காலை 10.00 மணியளவில் மெரினா பே ஹோட்டலில் இரு வரையும் காண முடிந்தது. டிரம்ப்-கிம் சந்திப்பில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இரு தரப்பிலும் விவாதிக் கப்பட்டிருக்கலாம் என்று கவனிப் பாளர்கள் கூறியுள்ளனர். சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு இரு தரப்பின் அதிகாரிகள் வெளியே தலைகாட்டினர். இதையடுத்து ஹோட்டலின் நுழைவாயிலில் காத்திருந்த வெளியூர், உள்ளூர் செய்தி யாளர்கள் அவர்களை நோக்கி ஓடினர். ஆனால் செய்தியாளர் களிடம் அவர்கள் வாய் திறக்க வில்லை.

வடகொரிய உதவி வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹுயுடன் பேச்சு நடத்திய பிறகு புறப்பட்ட அமெரிக்க தூதர் சங் கிம். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மேலும் செய்திகள்