பாதுகாப்பு வளையத்தில் ஆர்ச்சர்ட் பகுதி

பாதுகாப்பு வளையத்தில் ஆர்ச்சர்ட் பகுதி

2 mins read

வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தங்கும் செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலிலும் பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் பிற்பகல் சிங்கப்பூர் வந்த வடகொரிய தலைவரும் அவருடன் வந்த பேராளர்களும் தங்ளின் சாலை யில் அமைந்துள்ள செயின்ட் ரெஜிஸ் ஹோட்டலில் தங்கு கின்றனர். அதிக மக்கள் நடமாட்டம் உள்ள ஆர்ச்சர்ட் பகுதியில் அந்த ஹோட்டல் அமைந்திருந் தாலும் பொதுமக்களுக்கு இடை யூறு இல்லாத அளவிற்கு பாது காப்பு ஏற்பாடுகள் அமைக்கப் பட்டிருந்தன என்று அந்த ஹோட்டல் வழியாக சென்ற பாதசாரி 31 வயது டஸ்டின் ஃபன்ட்ஹெலர் கூறினார். "செயின்ட் ரெஜிஸ் ஹோட் டல் பக்கம்கூட செல்ல முடியாத அளவிற்கு பலத்த பாதுகாப்பு இருக்கும் என எதிர்பார்த்தேன்.

ஆனால் இயல்பு வாழ்க்கை முறைக்கு பெரிய தடை வராமல், செயல்பாடுகள் சீரான முறையில் எற்பாடு செய்யப்பட்டுள்ளன," என்றார் அமெரிக்க பல்மருத்து வரான அவர். அந்த ஹோட்டலின் அருகேயுள்ள கடைத் தொகுதியில் நாணய மாற்று வியாபாரம் செய்து வரும் 29 வயது முகம்மது ரஹ்மத் துல்லா, கடை யின் வியாபாரத்திற்கு பாதிப்பு இல்லை என்றார். "இன்று மக்கள் நடமாட்டமும் வாடிக்கையாளர்களின் எண் ணிக்கையும் சற்றுக் குறைவாக இருக்கின்றன.

பலத்த பாதுகாப்பு இருக்கும் என நினைத்து இப் பகுதிக்கு வருவதற்கு மக்கள் சற்று தயங்குவார்கள். இன்னும் சில நாட்களுக்கு வியாபாரம் மந்தமாக இருக்கும் என்று எதிர் பார்க்கிறேன்," என்றார் அவர். ஹோட்டலுக்கு வெளியே நேற்று காலை நிலவரப்படி பல நாடுகளைச் சேர்ந்த செய்தி யாளர்கள் குழுமியிருந்தனர். குறிப்பாக கொரியா, ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர்கள் மிகுதியாக இருந்தனர்.

மேலும் செய்திகள்