அதிபராவதற்கு முன்னர் சொத்து மேம்பாட்டாளராக இருந்த திரு டிரம்ப், வடகொரியாவில் சொத்துச் சந்தை மூலம் உண்டாகக் கூடிய பொருளியல் வளம் குறித்து சிங்கப்பூர் செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். "எடுத்துக்காட்டாக, வடகொரியாவில் மிகச்சிறந்த கடற்கரைகள் உள்ளன," என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார். "ஒவ்வொரு முறையும் அவர்கள் தங்களது பீரங்கி குண்டுகளை கடலை நோக்கி வெடிக்கச் செய்யும்போது, அந்த இடத்திலிருக்கும் கடல் காட்சியைப் பார்த்து வியப்பேன். அது கொண்டோமினியம் கட்டுவதற்கு சிறந்த இடம். "உலகின் மிகச் சிறந்த ஹோட்டல்களை அங்கு கட்டலாம். ஒரு பக்கம் சீனா, மறுபக்கம் தென்கொரியா. நடுவில் வடகொரியா. சொத்துச் சந்தை கண்ணோட்டத்தில் எண்ணிப் பாருங்கள்," என்று அதிபர் தெரிவித்தார்.
வடகொரியாவில் கொண்டோமினிய குடியிருப்பு?
1 mins read

