ஆர்ச்சர்ட் சாலையில் புகைபிடிக்கத் தடை ஒத்திவைப்பு

ஆர்ச்சர்ட் சாலையில் புகைபிடிக்கத் தடை ஒத்திவைப்பு

1 mins read
79ae6baf-7fcf-4ea4-a648-7989d62a9065
-

ஆர்ச்சர்ட் சாலையில் பொது இடங்களில் புகைபிடிப்பதற்கான தடை இந்த ஆண்டு இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூலை முதல் தேதி நடப்புக்கு வர இருந்த தடை, தற்போது மேலும் ஆறு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புகையற்ற வட்டாரமாக ஆர்ச்சர்ட் சாலையை நடைமுறைப் படுத் துவதற்கு காலஅவகாசம் தேவை என வர்த்தகங்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புகை பிடிப்பதற்கான தனியான இடங்களை உருவாக்குவதற்கு வர்த்தகங்களுக்கு காலஅவகாசம் தேவைப்பட்டதால், புகைபிடிப்பதற் கான தடை ஆண்டு இறுதிவாக்கி ல் செயல்படுத்தப்படலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப் பிட்டது.