சிங்கப்பூரைவிட்டு ஓடிய ஆடவருக்கு நான்கு ஆண்டு சிறை

1 mins read
bdbc7307-cd36-41ec-8bb6-62b19e922534
-

தாமான் ஜூரோங்கில் 1996ல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து ஃபூ சியாங் தியான் எனும் சிங்கப்பூர் ஆடவர் மலேசியாவுக்கு ஓடினார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேடப்பட்டு வந்தார் அவர். கோலாலம்பூரில் இருந்த 59 வயது ஃபூ, இவ்வாண்டு மார்ச் 2ஆம் தேதி ராயல் மலேசிய போலிசிடம் சரணடைந்தார். பின்னர் சிங்கப்பூருக்கு அவர் திருப்பி அனுப்பப்பட்டார். ஃபூவுக்கு நேற்று நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் மூன்று ஆண்டுகளுக்கு அனைத்துப் பிரிவு வாகனங்களை ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு